வாலிபர் பலி

நத்தம், ஏப். 19: நத்தம் அருகே செந்துறை நல்லான்புதூரை சேர்ந்தவர் முருகேசன் (26). இவர் சம்பவத்தன்று செந்துறைக்கு டூவீலரில் சென்று கொண்டிருந்தார். மங்களப்பட்டி பிரிவில் சென்ற போது, எதிரில் மங்களபட்டி புதூரை சேர்ந்த ஆண்டிச்சாமி (55) என்பவர் ஓட்டி வந்த டூவீலர், எதிர்பாராதவிதமாக முருகேசனின் டூவீலர் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த முருகேசன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து நத்தம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Related Stories: