சின்னமனூர், ஏப். 19: சின்னமனூர் நகராட்சியில் கால்வாயை விரிவுபடுத்தும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சின்னமனூர் நகராட்சியில் 27 வார்டுகள் உள்ளன. சுமார் 85 ஆயிரத்ததிற்கு மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். நகராட்சிக்குட்பட்ட 1வது வார்டான கீழ பூலாலனந்தபுரத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. ஆயிரத்திற்கு 500க்கு மேற்பட்டோர் வசிக்கின்றனர். இங்குள்ள முதல் தெருவில் குறுகிய அளவில் கால்வாய் இருந்ததால் கழிவுநீர் சரிவர செல்லாமல் குப்பை குவிந்து கிடந்தது.
இதனால் கடும் துர்நாற்றம் வீசியதுடன், சுாகாதார சீர்கேடு நிலவி வந்தது. இதனால் கால்வாயை அகலப்படுத்த வேண்டும் என இப்பகுதி பொதுமக்கள் நகராட்சிக்கு கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து பொதுமக்களின் கோரிக்கையையேற்று கால்வாயை விரிவுபடுத்தும் பணிகள் துவங்கியது. தற்போது கால்வாய் கரையில் தடுப்பு சுவர்கள் கட்டும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது. இதனால் இப்பகுதி பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
