ஐஎஸ்எல் கால்பந்து சென்னையின் எப்சி அசத்தல் வெற்றி: போராடி வீழ்ந்த டெல்லி

சென்னை: ஐஎஸ்எல் கால்பந்து போட்டியில் நேற்று, சென்னையின் எப்சி அணி, ஸ்போர்டிங் டெல்லி அணியை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. ஐஎஸ்எல் கால்பந்து போட்டி சென்னை ஜவகர்லால் நேரு ஸ்டேடியத்தில் நேற்று நடந்தது. அதில் சென்னையில் எப்சி – ஸ்போர்டிங் டெல்லி அணிகள் மோதின. துவக்கம் முதல் ஆக்ரோஷமாக ஆடிய சென்னை அணி வீரர்கள் கோல் போடுவதில் முனைப்பு காட்டினர்.

போட்டியின் 11வது நிமிடத்தில் சென்னை அணி வீரர் ஃபரூக் சவுத்ரி அட்டகாசமாக பந்தை கடத்திச் சென்று அணியின் முதல் கோல் போட்டார். அதன் பின் இரு அணி வீரர்கள் பல முறை முயன்றும் கோல் விழவில்லை. அதனால், 1-0 என்ற கோல் கணக்கில் சென்னை அணி அபார வெற்றியை பதிவு செய்தது.

ஐஎஸ்எல் தொடரில் மும்பை சிட்டி அணி 8 போட்டிகளில் ஆடி, 5 வெற்றி, 3 தோல்விகளுடன் 18 புள்ளிகள் பெற்று பட்டியலில் முதலிடம் வகிக்கிறது. மோகன் பகான் அணி 8 போட்டிகளில் ஆடி 5 வெற்றி, 2 தோல்விகளுடன் 17 புள்ளிகள் பெற்று 2ம் இடத்தை பிடித்துள்ளது. சென்னையின் எப்சி அணி, 8 போட்டிகளில் ஆடி 2 வெற்றி, 2 தோல்விகளுடன் 8 புள்ளிகள் பெற்று பட்டியலில் 10ம் இடத்தில் உள்ளது.

Related Stories: