சமூக அறிவியல் கல்லூரி 57ம் ஆண்டு விழா மாணவர்களுக்கு பாராட்டு

மதுரை, ஏப். 17: மதுரை சமூக அறிவியல் கல்லூரியின் 57ம் ஆண்டு விழா, முன்னாள் மாணவர் சங்க அரங்கில் வெகு சிறப்பாக நடைபெற்றது. கல்லூரி செயலர் தர்மசிங் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக மதுரை காமராஜர் பல்கலைக்கழக பதிவாளர் (பொ) மற்றும் தேர்வுத்துறை கட்டுப்பாட்டு அலுவலர் (பொ) முனைவர் எஸ்.முத்தையா பங்கேற்று இறுதியாண்டு மாணவ, மாணவிகளை வாழ்த்தி சிறப்புரையாற்றினார். கல்வியில் சிறந்து விளங்கிய இறுதியாண்டு மாணவ, மாணவிகளுக்கும், விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கும் பரிசுகள் மற்றும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.

கல்லூரி முதல்வர் முனைவர் பி.ஜெயக்குமார் 2025-26ம் கல்வி ஆண்டிற்கான அறிக்கை வாசித்து வரவேற்றார். கல்லூரியின் இறுதியாண்டு முடித்து செல்லக்கூடிய மாணவ, மாணவிகள் தங்களது இனிமையான அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். இதன் முக்கிய நிகழ்வாக கல்லூரி படிப்பை முடித்து செல்லும் இளங்கலை மற்றும் முதுகலை மாணவ, மாணவிகள் மெழுகுவர்த்தி ஏந்தி, எதிர்காலத்தில் வெகு சிறப்பாக பணியாற்றுவோம் என, உறுதி மொழி ஏற்றனர். சமூகப்பணித்துறை தலைவர் முனைவர் நிஷாந்த் நன்றி கூறினார்.

 

Related Stories: