தார்ச்சாலை பணியை விரைவுபடுத்த கோரிக்கை

போடி, ஏப். 17: போடி அருகே நடந்து வரும் தார்ச்சாலை பணியை விரைந்து முடிக்க கோரிக்கை எழுந்துள்ளது. தேனி மாவட்டம் போடி-உத்தமபாளையம் மாநில நெடுஞ்சாலையில் பல கிராமங்கள் உள்ளன. இதனால் இந்த சாலையில் போக்குவரத்து நிறைந்து காணப்படும். இதில் போடி அருகே ரெங்கநாதபுரம்கரட்டுபட்டி பிரிவு-சிலமலை நுழைவாயில் வரையிலான இணைப்புச்சாலை 3 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.

உரிய பராமரிப்பில்லாததால் இந்த சாலை சேமடைந்து காணப்பட்டது. பொதுமக்களின் கோரிக்கையையேற்று நபார்டு வங்கி சார்பில் ரூ. 2.95 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு கடந்த மாதம் சாலையை சீரமைக்கும் பணி தொடங்கியது. எனவே வாகன ஓட்டுனர்கள் மற்றும் பொதுமக்கள் நலன் கருதி, சாலை சீரமைப்பு பணியை விரைவுபடுத்த வேண்டும் என்று மாநில நெடுஞ்சாலை துறை அதிகாரிகளுக்கு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

Related Stories: