திருப்பரங்குன்றம் கோயிலில் உண்டியல் காணிக்கை ரூ.43 லட்சம்

திருப்பரங்குன்றம், ஏப். 17: திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயிலில் பக்தர்கள் காணிக்கை செலுத்த ஏராளமான உண்டியல்கள், இந்து அறநிலையத்துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ளன. இந்த உண்டியல்கள் மாதந்தோறும் திறககப்பட்டு, காணிக்கை கணக்கிடும் பணிகள் நடைபெறுவது வழக்கம். இதன்படி கடந்த மாதம் பகதர்கள் வழங்கிய காணிக்கை எண்ணும் பணிகள், சுப்பிரமணியசுவாமி கோயில் அறங்காவலர் குழுத் தலைவர் சத்யபிரியா பாலாஜி, துணை ஆணையர் ஞானசேகரன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

இதில் கண்காணிப்பாளர்கள் ரஞ்சனி, சுமதி, சத்யசீலன், அலுவலர்கள் மணிமாறன், கோபி உள்ளிட்டோருடன் கோயில் ஊழியர்கள், வேத பாடசாலை மாணவர்கள், ஐயப்ப சேவா சங்கத்தினர், வங்கி ஊழியர்கள் உள்ளிட்டோர் ஈடுபட்டனர். இந்த பணிகளின் முடிவில் உண்டியல்களில் பக்தர்கள் செலுத்திய காணிக்கையாக ரொக்கம் 43 லட்சத்து 3,699 ரூபாய்,.80 கிராம் தங்கம், 2 கிலோ 750 கிராம் வெள்ளி பொருட்கள் கிடைத்துள்ளதாக, கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Related Stories: