சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் மாநிலம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு, திமுக, கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில் இன்று நாமக்கல் மாவட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரப்புரையில் ஈடுபட்டுள்ளார்.
பரப்புரையில் முதல்வர் கூறியதாவது:
தமிழன் என்ரொரு இனம் உண்டு; தனியே அவருக்கொரு குணம் உண்டு என்று கருப்பு கொடியேற்றி இன்று காட்டிவிட்டோம். இது வெறும் டிரைலர்தான். மெயின் பிச்சரை பார்க்க வேண்டும் என்று டெல்லி ஆசைப்படக்கூடாது. தமிழர்கள் ரத்தத்தில் சூடு குறைந்து விட்டது. தெருவில் இறங்கி போராடமாட்டார்கள் என நினைக்க வேண்டாம். மொழிக்காக தெருவில் இறங்கியவர்கள், இனத்தின் உரிமைக்காக இறங்கமாட்டோமா..? தமிழருக்காக போராட யார் இருக்கானு நினைக்காதிங்க. இந்த முத்துவேல் கருணாநிதி இருக்கான். 1000 எமர்ஜென்சிகளை பார்க்க தயார்.
டெல்லியின் ரிமோட் கன்ட்ரோலுக்கு அடிமைகள்தான் அடிபணிவார்கள். தன்மானம் உள்ள தமிழர்கள் டெல்லிக்கு அடிபணியமாட்டோம். தமிழ்நாட்டின் போராட்ட குணத்தை பார்க்க ஆசைப்பட வேண்டாம். தொகுதி மறுவரையறை என்பது தமிழ்நாட்டின் உரிமைகளை பறிக்கும் சதி. மாநிலங்களை நசுக்க நினைத்தால் கை கட்டி நிற்போம் என தப்பு கணக்கு போடாதீர்கள். முதுகெலும்பற்ற கூட்டம்தான் அதிமுக. தொகுதி மறுவரையறை என்பது தமிழ்நாட்டின் உரிமைகளை பறிக்கும் சதி.
தமிழ்நாட்டு எம்.பி.க்கள் தேர்தல் பணியில் இருப்பார்கள் என்று பாஜக நினைத்தது. கருப்புக் கொடி ஏற்றி போராட்டம் நடத்தியது வெறும் டிரெய்லர் தான். மொழிக்காக இறங்கியவர்கள் தமிழ்நாட்டின் உரிமைக்காக போராட்டத்தில் இறங்க மாட்டோமா.? மாநிலங்களை நசுக்க நினைத்தால் கை கட்டி நிற்போம் என தப்பு கணக்கு போடாதீர்கள். தமிழ்நாட்டுக்கு எதிராக பாஜகவும் அதிமுகவும் சேர்ந்து ஏற்படுத்தியிருக்கிற பேராபத்துதான் தொகுதி மறுசீரமைப்பு.
அலங்கோலத்துக்கும் அவலத்துக்கும் எடுத்துக்காட்டாக ஆட்சி நடத்தினார் எடப்பாடி பழனிசாமி. பழனிசாமி ஆட்சியில் எதிலும் கலெக்ஷன், கரப்ஷன், கமிஷன் என்று இருந்தது. அதிமுக ஆட்சியில் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு முதல் பொள்ளாச்சி வரை மக்கள் கதறல்கள். அதிமுக ஆட்சி இப்படி இருக்கும் நிலையில் என்.டி.ஏ. ஆட்சி வந்தால் எப்படி இருக்கும்..? பாஜக ஆட்சிக்கு வந்தால் குலக்கல்வியை கொண்டுவருவார்கள், இளைஞர்களின் வேலைகளை பறிப்பார்கள். தமிழை சிதைக்க இந்தியை திணிப்பார்கள். பிசி, எம்.பி.சி., எஸ்.சி., எஸ்.டி. இடஒதுக்கீட்டை பறிப்பார்கள். தமிழ்நாடு என்ற அடையாளத்தையே அழித்து தட்சிண பிரதேசம் என பெயர் சூட்டி விடுவார்கள்.
பாஜகவிடம் தமிழ்நாட்டின் உரிமைகளை எடப்பாடி பழனிசாமி அடகு வைத்துள்ளார். தமிழ்நாட்டுக்கு துரோகம் செய்யும் 10 தோல்வி பழனிசாமிக்கு 11வது தோல்வியை கொடுக்க வேண்டும். அதிமுகவுக்கு விழும் வாக்குகள் எல்லாம் பாஜகவுக்கு விழும் வாக்குகள்தான். தமிழ்நாட்டை வட்டமிடும் பாஜக எனும் பருந்தை விரட்டியடிக்க வேண்டும். பாஜகவும், அதிமுகவும் வேரோடும், வேரடி மண்ணோடும் வீழ்த்தப்பட வேண்டும்.
இந்தியாவுக்கே வழிகாட்டும் மாடல் நமது திராவிட மாடல். இந்தியாவின் ஹீரோ தமிழ்நாடு
