251 மதுபாட்டில்கள் பறிமுதல்

நத்தம், ஏப். 12: நத்தம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கிராம பகுதிகளில் நேற்று தேர்தல் பறக்கும் படை அதிகாரி சுகுமாறன் தலைமையிலான குழுவினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சடையம்பட்டி டாஸ்மாக் கடை அருகே பறக்கும் படையினர் சோதனை நடத்தினர்.

அப்போது அப்பகுதியில் ஒரு பையில் வைத்து மதுபாட்டில்கள் விற்பனை செய்து கொண்டிருந்தவர் அதிகாரிகளை கண்டதும் ஓட்டம் பிடித்தார். தொடர்ந்து அங்கு சென்ற அதிகாரிகள் விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 251 மதுபாட்டில்களை பறிமுதல் செய்து நத்தம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து தப்பிய நபரை தேடி வருகின்றனர்.

 

Related Stories: