பட்டாசு வெடித்து வாலிபர் பரிதாப பலி

பாலக்காடு, ஏப். 17: பாலக்காடு மாவட்டம் கிருஷ்ணபுரம் அருகே விசுக்கனி திருவிழாவையொட்டி பட்டாசு வெடித்து வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்துயுள்ளது. கிருஷ்ணபுரம் ராகம் கார்னர் பகுதியை சேர்ந்தவர் திலீப் (34). நேற்று நடந்த விசுக்கனி திருவிழாவில் மக்கள் விதவிதமான பட்டாசுகளை வெடித்து கொண்டாடினர். இந்நிலையில் ஸ்ரீகிருஷ்ணபுரம் பகுதியில் திலீப் என்ற வாலிபர் தனது கிளப் நண்பர்களுடன் பட்டாசுகளை வெடித்த போது திடீரென அவர் கையில் இருந்த பட்டாசு வெடித்து சிதறின.

இதில் அவர் உடலில் தீக்காயம் ஏற்பட்டது. இதையடுத்து சக நண்பர்கள் தீலிப்பை மீட்டு தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து ஸ்ரீகிருஷ்ணபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

 

Related Stories: