தஞ்சை வழக்கறிஞர் சங்க தலைவராக ஜீவகுமார் தேர்வு

தஞ்சாவூர், ஏப்.12: தஞ்சாவூர் வழக்கறிஞர் சங்கத்தின் தலைவராக ஜீவகுமார் தேர்ந்தெடுக்கப்பட்டார். தஞ்சாவூர் வழக்கறிஞர் சங்கத்தின் தேர்தல் நேற்று நடைபெற்றது. இதில், தலைவராக ஜீவகுமார், துணை தலைவராக ஆனந்தவல்லி, செயலாளராக பிரசன்னா, இணைச்செயலாளராக ஜெகன், மகாலட்சுமி, பொருளாளராக ஆனந்தபாபு ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மேலும், செயற்குழு உறுப்பினராக இலங்கதிர், பாலச்சந்திரன், ஸ்ரீராம், ராஜா, தில்லைராஜன், திருமகள் தேவி, ரங்கீலா ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

 

Related Stories: