பங்குனி திருவிழாவை முன்னிட்டு பூப்பல்லக்கில் அம்மன் பவனி

நிலக்கோட்டை, ஏப்.10: நிலக்கோட்டை அருகே அம்மையநாயக்கனூரில் உள்ள பழமையான ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவினை முன்னிட்டு பூப்பல்லக்கு பவனி நிகழ்ச்சி நடந்தது. நிலக்கோட்டை அருகே உள்ள அம்மையநாயக்கனூரில் நூற்றாண்டு பழமையான ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயில் பங்குனி திருவிழா, கடந்த வாரம் கொடியேத்துடன் தொடங்கியது. இதனைத்தொடர்ந்து தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள், சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றன.

ஒவ்வொரு நாளும் அன்னம், ஷேசம், யானை, குதிரை உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் அம்மன் வீதிஉலா வரும் நிகழ்ச்சி நடந்தது. இதில் பத்தாம் நாளான நேற்று அதிகாலை, வானவேடிக்கைகள், கோலாட்டம், தேவராட்டம், உறுமி மேளம் முழங்க, முக்கிய வீதிகளின் வழியாக அம்மன் பூ பல்லக்கில் பவனி வரும் நிகழ்ச்சி நடந்தது. இதில், திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட பல்வேறு பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

 

Related Stories: