சர்வைவல் பிக்சர்ஸ் தயாரிக்க, இளையராஜா இசை அமைத்துள்ள படம், ‘தட்டுவண்டி’. படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடக்கிறது. முக்கிய கதாபாத்திரங்களில் சிறுவன் ராகவன், விஜயபாஸ்கர், திலீபன், மேரி பென்சி குளோரியா, தங்கதுரை நடித்துள்ளனர். 2021ல் இரண்டு மாநில அரசு விருதுகளை வென்ற ‘பில்டர் கோல்டு’ என்ற படத்தின் இயக்குனர் விஜயபாஸ்கர், ‘தட்டுவண்டி’ படத்தை எழுதி இயக்கியுள்ளார்.
வித்தியாசமான கதையுடன் படம் உருவாகியுள்ளது. இளையராஜாவின் பின்னணி இசை அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என்று படக்குழு தெரிவித்துள்ளது.
