லவ் புராஜெக்ட்

சென்னை: டி.ஐ. கபில், காதலை மையமாகக் கொண்டு உருவாகி வரும் ‘லவ் புராஜெக்ட்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் புதிய பயணத்தை தொடங்கியுள்ளார். நடிகர் பிரதீப் ரங்கநாதனுடன் குறும்படத்தில் இணைந்து பணியாற்றிய அனுபவம் பெற்றுள்ள கபில், தற்போது தனது முதல் முழுநீள திரைப்படத்தை இயக்கி, கதாநாயகனாகவும் நடித்துள்ளார். கதாநாயகியாக சங்கீதா நடித்துள்ளார்.

மற்றும் சக்திவேல், குண்டு சத்யா, வினோத், விஜய் சேனாதிபதி ஆகியோர் நடித்துள்ளனர். ஒளிப்பதிவு – சாதிக் கபீர். இசை – சிமியோன் டெல்பர். கபில் கூறும்போது, ‘‘இன்றைய இளைஞர்களின் காதல், உறவுகள் மற்றும் உணர்வுகளை மையமாகக் கொண்டு உருவாகும் படம் இது. புதிய திரைக்கதை, வித்தியாசமான காட்சியமைப்பு மற்றும் தரமான தொழில்நுட்பத்தில் உருவாக்கி வருகிறோம். காதலை ஒரு புதிய பார்வையில் ரசிகர்களுக்கு வழங்குவதே எங்கள் நோக்கம்’’ என்றார்.

Related Stories: