ஓய்வெடுக்க முடிவெடுத்த கிறிஸ்டோபர் நோலன்

உலகப் புகழ்பெற்ற ஹாலிவுட் இயக்குனர் கிறிஸ்டோபர் நோலன் உருவாக்கிய ‘தி ஒடிஸி’ என்ற படம், கிரேக்க கவிஞர் ஹோமர் எழுதிய புகழ்பெற்ற காப்பியங்களில் ஒன்றான ‘தி ஒடிஸி’ என்ற புராணக்கதையை மையப்படுத்தி உருவானது. இந்த கதை ஏறத்தாழ 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு போருக்கு பிறகான ஒரு வீரனின் நாடு திரும்புதலை மையமாக கொண்டது. இப்படம் முதல்முறையாக ஐமேக்ஸ் 70 எம்எம் கேமராவில் படமாக்கப்பட்டுள்ளது. பல்வேறு மொழிகளில் உலகம் முழுவதும் திரைக்கு வந்த இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று, இதுவரை 2,500 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. இந்நிலையில் கிறிஸ்டோபர் நோலன், தற்காலிகமாக ஓய்வெடுக்க முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

அவர் கூறுகையில், ‘படத்தின் பிரமாண்டமான கால அளவு என்னையும், படக்குழுவினரையும் உடல்ரீதியாக கடுமையாக பாதித்தது. அதாவது, ஆற்றலின் கடைசி எல்லைக்கே கொண்டு சென்றது. இது ‘தி ஒடிஸி’ கதை என்பதால் மிகவும் கடினமாகவே இருக்கும். அப்படி இல்லை என்றால், நாங்கள் சரியாக படமாக்கவில்லை என்று அர்த்தம்’ என்றார். அவரிடம், ‘தி ஒடிஸி’ படத்துக்காக ரசிகர்கள் மூன்று வருடங்கள் காத்திருந்தனர். உங்களின் அடுத்த படம் வெளியாக மூன்று வருடங்களாகுமா என்றபோது, ‘ஆமாம், அவ்வளவு காலம் காத்திருக்க வேண்டும்’ என்றார். 2014 முதல் ‘இன்டர்ஸ்டெல்லார்’, ‘டன்கிர்க்’, ‘டெனெட்’, ‘ஓப்பன்ெஹய்மர்’ ஆகிய படங்களுக்கு இடையிடையே, தொடர்ந்து மூன்று வருட இடைவெளியை கிறிஸ்டோபர் நோலன் எடுத்து வருகிறார்.

Related Stories: