இந்த ஸ்டார்ஸ் யாருடைய வாரிசுகள் தெரியுமா? ஒரு சுவாரஸ்ய ரிப்போர்ட்

‘பிளாஸ்ட்’, ‘இதயம் முரளி’ படங்களில் நடித்த ஹீரோயின் பிரீத்தி முகுந்தன், கணித மேதை ராமானுஜத்தின் குடும்பத்தை சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது. ராமானுஜத்தின் மகன் நாராயணனின் கொள்ளுப்பேத்தி வகையறா இவர். எழுத்தாளர் சாண்டில்யனின் பேரன்தான் தமிழ்ப் பட இசையமைப்பாளர் ஷான் ரோல்டன். அட்வகேட் ராம் ஜெத்மலானியின் மகன் வழி உறவினர்தான் தமிழ் நடிகை காம்னா ஜெத்மலானி. இதுபோல் சினிமாவுக்கு தொடர்பில்லாத விஐபிக்களின் குடும்பத்திலிருந்து வந்து சினிமாவில் ஜொலிப்பவர்கள் பற்றிய தொகுப்பு:

* அதிதி ராவ் ஹைதரி: இவர் இந்தியாவின் இரு வேறு அரச குடும்பங்களைச் சேர்ந்தவர். ஐதராபாத் மாநிலத்தின் முன்னாள் பிரதமர் அக்பர் ஹைதரியின் கொள்ளுப் பேத்தி மற்றும் அஸாஃப் ஜாஹி மன்னர் பரம்பரையை சேர்ந்த ஜே.வி. ராமேஸ்வர ராவின் பேத்தி ஆவார்.

* ரிதேஷ் தேஷ்முக்: பாலிவுட்டின் முன்னணி நடிகரான இவர், மகாராஷ்டிர மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சரும், மத்திய அமைச்சருமாக இருந்த மறைந்த காங்கிரஸ் தலைவர் விலாஸ்ராவ் தேஷ்முக்கின் மகன் ஆவார்.

* பிரகாஷ் ராஜ்: மிகச்சிறந்த நடிகரான இவரது தம்பி பிரசாந்த் ராஜ் ஒரு தொழிலதிபர். இவர்களது தாய் வழி தாத்தா, மைசூர் சமஸ்தானத்தின் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்தவர்.

* சாய் பல்லவி: இவரது தந்தை செந்தாமரை கண்ணன், மத்திய அரசின் கலால் மற்றும் சுங்கத்துறையில் உயர் அதிகாரியாகப் பணியாற்றியவர்.

* சுஷாந்த் சிங் ராஜ்புத்: மறைந்த பாலிவுட் நடிகரான இவருடைய தந்தை கைலாஷ் சிங் ராஜ்புத் ஒரு அரசு அதிகாரி. இவருடைய அக்கா மிது சிங் மாநில அளவிலான கிரிக்கெட் வீராங்கனை.

* கார்த்திக் ஆர்யன்: இன்றைய பாலிவுட்டின் இளம் முன்னணி நடிகரான கார்த்திக் ஆர்யனின் பெற்றோர் இருவருமே மருத்துவர்கள். இவரது தந்தை மனிஷ் திவாரி குழந்தை நல மருத்துவர், தாய் மாலா திவாரி மகப்பேறு டாக்டர் ஆவார்.

* லாரா தத்தா: முன்னாள் பிரபஞ்ச அழகியும் நடிகையுமான இவரது தந்தை விங் கமாண்டர் எல்.கே. தத்தா, இந்திய விமானப்படையில் பணியாற்றியர்.

* மாதவன்: இவரது தந்தை ரங்கநாதன் டாடா ஸ்டீல் நிறுவனத்தின் எக்ஸிகியூட்டிவ் மேலாளராக இருந்தவர். அவரது தாயார் சரோஜா பேங்க் ஆஃப் இந்தியாவில் மேலாளராக இருந்தவர். இவரது நெருங்கிய உறவினர் ஒருவர் இஸ்ரோ விஞ்ஞானியாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

* சித்தார்த்: பன்முகத் திறமை கொண்ட நடிகர் சித்தார்த்தின் தந்தை சூர்யநாராயணன், கார்ப்பரேட் துறையில் பெரிய பதவிகளில் இருந்தவர். இவரது குடும்பத்தில் யாருக்கும் சினிமா பின்னணி கிடையாது, அனைவரும் வணிகம் மற்றும் மேலாண்மைத் துறையைச் சேர்ந்தவர்கள்.

* அமிதாப் பச்சன்: இன்று இந்திய சினிமாவின் மெகா ஸ்டாராக இருக்கும், இவரது தந்தை ஹரிவன்ஷ் ராய் பச்சன் இந்தியாவின் மிகச்சிறந்த, புகழ்பெற்ற இந்தி கவிஞர் மற்றும் இலக்கியவாதி ஆவார். சினிமாவுக்கும் அவருக்கும் எந்தத் தொடர்பும் இருந்ததில்லை.சட்டம் மற்றும் நீதித்துறை குடும்பம்.

Related Stories: