சென்னை: செல்லா அய்யாவு இயக்கத்தில் உருவாகும் அடுத்த படத்தில் கென் கருணாஸ் ஹீரோவாக நடிக்கிறார். ‘யூத்’ படத்தின் வெற்றிக்கு பிறகு பல இயக்குனர்கள் கென் கருணாஸை இயக்க கதை சொல்லி வருகிறார்கள். இப்போதைக்கு கென் கருணாஸ், வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகும் ‘ராஜன் வகையறா’ படத்தில் மட்டுமே நடித்து வருகிறார்.
இதனிடையே ‘கட்டா குஸ்தி’ முதல் பாகம், சமீபத்தில் வந்த அதன் இரண்டாம் பாகம் ஆகியவற்றின் இயக்குனர் செல்லா அய்யாவு இயக்கத்தில் நடிக்க கென் கருணாஸ் சம்மதம் தெரிவித்திருக்கிறார். இந்த படத்தில் நடிக்கும் மற்ற நட்சத்திரங்கள் மற்றும் டெக்னீஷியன்கள் விவரம் விரைவில் வெளியாகும். இது காமெடிக்கு முக்கியத்துவம் தரும் காதல் கதையாக உருவாகிறது.
