முதல்வர் விஜய் இன்று காஞ்சிபுரம் செல்கிறார்

சென்னை: முதல்வர் விஜய் இன்று காஞ்சிபுரம் செல்கிறார். முதல்வர் விஜய் இன்று காஞ்சிபுரம் மாவட்டம் செல்கிறார். கோயில் நகரம் என அழைக்கப்படும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல தொழிற்சாலைகளும் உள்ளன. சுங்குவார்சத்திரம், இருங்காட்டுக்கோட்டை, ஸ்ரீபெரும்புதூர் என பல தொழிற்சாலைகள் நிறைந்த பகுதிகள் இங்கு உள்ளன.

முதல்வர் விஜய் இன்று இருங்காட்டுக்கோட்டை, ஸ்ரீபெரும்புதூர், ஒரகடம் பகுதியில் உள்ள தொழிற்சாலைகளை பார்வையிடுகிறார். தமிழக அரசுடன் டைம்லர் நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டு வணிக வாகன உற்பத்தி செய்து வரும் நிலையில், காஞ்சிபுரம் ஒரகடத்தில் உள்ள டைம்லர் வணிக வாகன உற்பத்தி தொழிற்சாலையை முதல்வர் விஜய் பார்வையிடுகிறார்.

இதேபோன்று தமிழக அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ள செயின்ட் கோபைன் நிறுவனம் கண்ணாடி உற்பத்தி செய்து வருகிறது. ஸ்ரீபெரும்புதூர் சிப்காட்டில் இயங்கி வரும் இந்த ஆலையிலும் முதல்வர் விஜய் ஆய்வு செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Related Stories: