தூத்துக்குடி மாதா பேராலய திருவிழா 5ம் நாளில் முதியோர்களுக்கான சிறப்பு திருப்பலி

 

தூத்துக்குடி, ஜூலை 31: தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலயத்தின் 444வது ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. நேற்று 5ம் நாள் திருவிழாவை முன்னிட்டு அதிகாலை 5 மணிக்கு முதல் திருப்பலி, காலை 5.45 மணிக்கு 2ம் திருப்பலி நடந்தது. காலை 6.30 மணிக்கு மேற்றிராசன ஆலய பங்கு இறைமக்கள் மற்றும் பள்ளிகளுக்கான திருப்பலி நடந்தது. இறைமக்களும், பள்ளி மாணவியர்களும் கலந்து கொண்டனர். தொடர்ந்து 7.30 மணிக்கு புனித பொம்பைமாதா சபை மற்றும் திருக்குடும்ப சபையினருக்கான சிறப்பு திருவிழா திருப்பலி நடந்தது. காலை 8.30 மணிக்கு வெள்ளப்பட்டி மற்றும் தருவைகுளம் பங்கு இறைமக்களுக்கான திருப்பலி நடந்தது. வெள்ளப்பட்டி, தருவைகுளம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த இறைமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.காலை 9.30 மணிக்கு வணிகர்கள், வர்த்தகர்களுக்கான வர்த்தகம் சிறப்பிற்கான திருப்பலி நடந்தது. முற்பகல் 11 மணிக்கு முதியோர் இல்லங்கள், எல்எஸ்பி அருட்சகோதரிகள், முதியோர் உள்ளிட்டோர் கலந்து கொண்ட முதியோருக்கான சிறப்பு திருப்பலி நடந்தது.

மாலை 5.30 மணிக்கு துறைமுக பங்கு இறைமக்களுக்கான சிறப்பு திருப்பலி நடந்தது. இத்திருப்பலிகளுக்கு ஆலய பங்குத்தந்தை ஜான்செல்வம், ஜேம்ஸ் விக்டர், ராஜா ரொட்ரிக்கோ,ேராஷன், சந்தீஸ்டன், தாமஸ், அந்தோணி பிச்சை, மரிய அரசு, துணை பங்குத்தந்தை ஜெரால்டு ஆகியோர் முன்னிலை வகித்தனர். இரவு 7 மணிக்கு இறைவனின் மீட்பு திட்டத்தில் அன்னை மரியா என்ற தலைப்பில் லயன்ஸ்டவுன் பங்குத்தந்தை ஆண்ட்ரூ டி ரோஸ் மறையுரை நிகழ்த்தினார். திரளான பங்கு மக்கள் திருப்பலிகளில் கலந்து கொண்டனர். விழாவின் சிகரமாக வரும் ஆகஸ்ட் 5ம்தேதி நகர வீதிகளில் பனிமய அன்னையின் திருவுருவப் பவனி நடக்கிறது. கோடைபோல் கொளுத்தும் வெயிலால் விளாத்திகுளத்தில் வறண்ட கண்மாய்கள்விளாத்திகுளம், ஜூலை 31: விளாத்திகுளம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கோடை போன்று வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் கண்மாய்கள் வறண்டு கடும் வறட்சி நிலவுகிறது. இதனால் தாகம் தீர்க்க கால்நடைகள் தண்ணீரைத்தேடி அலையும் நிலை காணப்படுகிறது.

விளாத்திகுளம் பகுதியின் முக்கிய நீர் ஆதாரங்களாக பெரிய கண்மாய்கள், சிறிய குளங்கள் மற்றும் ஏரிகள் விளங்குகின்றன. இந்தாண்டு கோடை முடிந்து தென்மேற்கு பருவமழை கைகொடுக்காத நிலையில், 2வது கோடை போன்ற வெயில் சுட்டெரித்து வருகிறது. சூரியனின் கதிர்கள் தகித்து வருவதால் ஒட்டுமொத்தப் பகுதியும் வறட்சியின் பிடியில் சிக்கியுள்ளது. நீர் நிலைகள் வறண்டு காணப்படுவதுடன் நிலத்தடி நீர்மட்டமும் பாதாளத்திற்குச் சென்றுவிட்டது. கிணறுகளும் வற்றத் தொடங்கியுள்ளன. இதனால் குடிநீர் தட்டுப்பாடு பிரச்னை தற்போதே தலைதூக்கி உள்ளது. எப்போதும் தண்ணீர் தழும்பி நிற்கும் கண்மாய்கள், தற்போது வெடிப்பு நிலங்களாகக் காட்சியளிப்பது பொதுமக்களையும், விவசாயிகளையும் வேதனையில் ஆழ்த்தியுள்ளது.

இப்பகுதியின் பிரதான தொழிலான விவசாயம், வெயிலின் தாக்கத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டு உள்ளது. கரிசல் மண்ணை நம்பி உழவு செய்து, விதைப்புக்குத் தயாராக இருந்த ஆயிரக்கணக்கான ஏக்கர் விளைநிலங்கள் ஈரப்பதமின்றி வறண்டு கிடக்கின்றன. வானம் பொய்த்ததால், கருகும் பயிர்களைக் கண்டு விவசாயிகள் செய்வதறியாது திகைத்து நிற்கின்றனர். ‘அடுத்த பருவமழை எப்போது பெய்யும், காய்ந்து போன நிலங்களுக்கு எப்போது உயிர் கிடைக்கும்?’ என்று வானத்தை நோக்கி எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர். மனிதர்களை விட வெயிலின் கொடுமையால் அதிகம் பாதிக்கப்பட்டிருப்பது கால்நடைகள்தான். கண்மாய்களும், கால்வாய்களும் வறண்டுவிட்டதால், ஆடு, மாடுகள் குடிநீருக்காகக் கிராமம் கிராமமாகக் கிலோமீட்டர் கணக்கில் அலைய வேண்டிய அவலநிலை ஏற்பட்டுள்ளது. சுட்டெரிக்கும் வெயிலால் புற்கள் அனைத்தும் கருகிவிட்டதால், தீவனப் பற்றாக்குறை ஏற்பட்டு கால்நடைகள் எலும்பும் தோலுமாக மாறி வருகின்றன.

கடும் வெப்பம் காரணமாகக் கால்நடைகளுக்குப் பல்வேறு நோய் தாக்கங்களும் ஏற்பட்டு வருகின்றன. மாடுகள் மற்றும் ஆடுகள் அதிக வெப்பத்தைத் தாங்க முடியாமல் வாயில் நுரை தள்ளி சுருண்டு விழும் நிலை ஏற்படுகிறது. கோடைக் காலத்தில் பரவக்கூடிய நச்சுயிரி (வைரஸ்) கிருமிகளால் கால்நடைகளுக்குக் கோமாரி மற்றும் அம்மைத் தாக்குதல்கள் அதிகரிக்கின்றன. வெப்ப உளைச்சல் காரணமாகப் பசுக்களின் தீவன உட்கொள்ளல் குறைந்து, பால் உற்பத்தி பாதியாகச் சரிந்துள்ளது.
விளாத்திகுளம் பகுதியில் நிலவும் இந்த அசாதாரண வறட்சி நிலையைக் கருத்தில் கொண்டு, மாவட்ட நிர்வாகம் கால்நடைகளுக்கான குடிநீர் தொட்டிகளை ஆங்காங்கே அமைக்க வேண்டும் என்றும், விவசாயிகளுக்கு உரிய நிவாரண உதவிகளை வழங்க வேண்டும் என்றும் அனைத்து தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வெப்பம் சார்ந்த நோய் பாதிப்பு அதிகரிப்பு
விளாத்திகுளம் பகுதியில் நிலவும் அதிகப்படியான வெப்பம், மனிதர்களின் ஆரோக்கியத்தையும் அச்சுறுத்தி வருகிறது. விளாத்திகுளம் அரசு மருத்துவமனையில் வெயில் சார்ந்த பாதிப்புகளுடன் வருவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உடலில் உள்ள நீர் மற்றும் உப்புச் சத்துக்கள் வியர்வை மூலம் வெளியேறுவதால் மயக்கம், சோர்வு மற்றும் தலைச்சுற்றல் ஏற்படுகிறது.கடும் வெயிலில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ளவும், உடலைக் குளிர்ச்சியாக வைத்திருக்கவும் பொதுமக்கள் தங்களின் உணவுப் பழக்கவழக்கங்களில் சில மாற்றங்களைச் செய்ய வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். இளநீர், பதநீர், கம்மங்கூழ், கேழ்வரகு கூழ், மோர் மற்றும் எலுமிச்சை சாறு போன்ற பானங்களும், வெள்ளரிக்காய், புடலங்காய், சுரைக்காய் போன்ற நீர்சத்து மிக்க காய்கறிகளும் உட்கொள்ளலாம், என்றனர்.

 

Related Stories: