சென்னை: சென்னை சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில் சுரங்கப்பாதையில் கல்லூரி மாணவர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. இரு மாணவர்களை ஓட ஓட துரத்தி வெட்டிய வழக்கில், பச்சையப்பன் கல்லூரியைச் சேர்ந்த 3 மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். இந்த மோதலில் 2 மாணவர்கள் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சம்பவம் குறித்து குறித்து பெரியமேடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
