சென்னை: சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் சென்னை பெருநகர மாநகராட்சி மேயர் பிரியா சார்பில் அவரது உதவியாளர் இ-மெயில் மூலம் புகார் ஒன்று அளித்துள்ளார். அதில், அடையாளம் தெரியாத நபர் ஒருவர் கடந்த சில நாட்களாக தொடர்ந்து தொடர்பு கொண்டு மன உளைச்சலை ஏற்படுத்தும் வகையில் தொல்லை கொடுத்து வருவதாகவும், மேலும், அந்த நபர் சமூக வலைதளங்களில் மேயரின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் அவதூறு பரப்பி வருகிறார்.
எனவே அந்த மர்ம நபர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகாரில் தெரிவிக்கப்பட்டிருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.மேயர் புகாரின்படி சென்னை போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் விசாரணை நடத்த சைபர் க்ரைம் பிரிவுக்கு உத்தரவிட்டுள்ளார். அதன்படி சைபர் க்ரைம் போலீசார் ேமயர் பிரியாவுக்கு தொடர்ந்து தொந்தரவு கொடுத்து வரும் மர்ம நபரை தேடி வருகின்றனர்.
