ரெண்டு நாளா சாப்பிடல… பச்ச தண்ணி கூட குடிக்கல!

 

காமன்வெல்த் விளையாட்டு போட்டித் தொடரின் மகளிர் பளுதூக்குதலில் தொடர்ந்து 3வது முறையாக தங்கப் பதக்கம் வென்று ஹாட்ரிக் சாதனை படைத்த இந்திய வீராங்கனை மீராபாய் சானு, இந்த வெற்றிக்காக தான் பட்ட சிரமங்கள், செய்த தியாகங்கள் பற்றி மனம் திறந்துள்ளார்.

செய்தியாளர்கள் சந்திப்பின்போது மீராபாய் கூறியதாவது: தயவு செய்து சீக்கிரமாக முடித்துக்கொள்ளுங்கள். நான் சாப்பிட்டு இரண்டு நாளாகிறது. அவ்வளவு ஏன்… பச்சை தண்ணீர் கூட குடிக்காமல் இருக்கிறேன். எனது இயல்பான உடல் எடை 50.5 கிலோ. கிளாஸ்கோ காமன்வெல்த் போட்டியில் 48 கிலோ எடை பிரிவில் பங்கேற்றதால், உடல் எடையை பராமரிப்பது தான் எனக்கு மிகப் பெரிய சவாலாக இருந்தது.

உடல் எடை சில கிராம்கள் கூடினாலும் போட்டியில் பங்கேற்க முடியாது என்ற நிலையில் அனைத்தையும் நிறுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதால் தான் கடந்த இரண்டு நாட்களாக எதுவும் சாப்பிடாமல், தண்ணீர் குடிக்காமல் போட்டியில் பங்கேற்றேன். பயிற்சியாளர், எனது தாயார், நண்பர்கள் அளித்த ஊக்கமே எனது மன உறுதிக்கு உரம் சேர்த்தது. என் மீதான எதிர்பார்ப்பும் அதிகமாக இருந்ததால் எடுத்த எடுப்பிலேயே அதிக எடையை தூக்க வேண்டும் என்று முடிவு செய்தேன்.

முதல் முயற்சியில் தவறினாலும், 2வது வாய்ப்பில் சாதிக்க முடிந்ததில் மிகுந்த மகிழ்ச்சி. தேசத்துக்காக மூன்றாவது தங்கம் வென்றதில் பெருமையும் பெருமிதமும் கொள்கிறேன்.இவ்வாறு மீராபாய் கூறியுள்ளார். மகளிர் 48 கிலோ எடை பிரிவில் பங்கேற்ற அவர் ஸ்நேட்ச் முறையில் 85 கிலோ, கிளீன் & ஜெர்க் முறையில் 105 கிலோ என மொத்தம் 190 கிலோ எடை தூக்கி தங்கப் பதக்கம் வென்றதுடன், புதிய காமன்வெல்த் போட்டி சாதனையை படைத்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories: