மகளிர் பளுதூக்குதலில் வெள்ளி; கியானேஷ்வரி அசத்தல்

 

கிளாஸ்கோ காமன்வெல்த் தொடரின் மகளிர் பளுதூக்குதல் 53 கிலோ எடை பிரிவு பைனலில் நேற்று களமிறங்கிய இந்திய வீராங்கனை கியானேஷ்வரி யாதவ் வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தினார். அவர் புதிய போட்டி சாதனையுடன் மொத்தம் 199 கிலோ எடை தூக்கி 2வது இடம் பிடித்தார். நைஜீரியாவின் ஒனோம் ஒமோலோலா டிடிஹ் (206 கி.) தங்கப் பதக்கமும், கனடாவின் ரெபக்கா குரோல்க்ஸ் (178 கி.) வெண்கலமும் வென்றனர்.கியானேஷ்வரி வென்ற வெள்ளியுடன் இந்தியா 1 தங்கம், 3 வெள்ளி, 1 வெண்கலம் என மொத்தம் 5 பதக்களை வென்று பட்டியலில் 8வது இடத்தில் இருந்தது. தொடர்ந்து பல பதக்க பிரிவுகளில் நேற்று இந்திய வீரர், வீராங்கனைகள் இறுதிச் சுற்றில் விளையாட தேர்வாகி இருந்ததால் இரட்டை இலக்கத்தை எட்டும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.

* மகளிர் பளுதூக்குதல் 58 கிலோ பைனல்: பிந்தியா ராணி தேவி
* பாரா தடகளம்: ஷர்மிளா தன்கர், கே.ஷில்பா ஷியாளா: மகளிர் குண்டு எறிதல் பைனல்.
* தடகளம்: ஆண்கள் உயரம் தாண்டுதல் பைனலில் சர்வேஷ் அனில் குஷாரே, தேஜஸ்வின் ஷங்கர், ஆதர்ஷ் ராம்.
* பாரா நீச்சல்: ஆண்கள் 100 மீட்டர் பிரெஸ்ட் ஸ்ட்ரோக் SB9 பைனலில் ஸ்வாதிக் படேல்.
* பளுதூக்குதலில் வி.அஜயா பாபு (79 கி.) பைனல்.
* நீச்சல்: ஆண்கள் 800 மீ. பிரீஸ்டைல் ஹீட்/பைனலில் ஆர்யன் நெஹ்ரா. சாஜன் பிரகாஷ் ஆண்கள் 200 மீ. பட்டர்பிளை பைனல்.
* பாரா தடகளம்: ஆண்கள் 100 மீ. டி38 பைனலில் ராகேஷ்பாய் பட், ஷ்ரேயன்ஷ் திரிவேதி.
* தடகளம்: ஆண்கள் 100 மீ. ஹர்டுல்ஸ் பைனலில் தேஜஸ் ஷிர்சே.

 

Related Stories: