சொத்துக்குவிப்பு, ஒழுங்கின்மை புகார் காரணமாக சமயபுரம், வடபழனி கோயில் நிர்வாகிகள் 2பேர் சஸ்பெண்ட்: அமைச்சர் ரமேஷ் உத்தரவு

சென்னை: சொத்துக்குவிப்பு மற்றும் ஒழுங்கின்மை புகாரின் அடிப்படையில் சமயபுரம் மற்றும் வடபழனி கோயில் நிர்வாகிகள் 2 பேரை பணியிடை நீக்கம் செய்து அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் உத்தரவிட்டுள்ளார். இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராக ரமேஷ் பொறுப்பேற்றதில் இருந்து தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு கோவிலுக்கும் நேரில் சென்று ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில் கடந்த 20ம் தேதி அமைச்சர் ரமேஷ் வடபழனி முருகன் கோயிலில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அந்தக் கோயிலில் முறையாக பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படாமல் இருந்துள்ளது. அதனால் அதுகுறித்து விசாரித்த அமைச்சர் அதற்குப் பொறுப்பு வடபழனி கோவில் இளநிலை உதவியாளர் ஹரி கோவிந்த் என்பதன் அடிப்படையில், அமைச்சர் உத்தரவின் பேரில் நிர்வாக ஒழுங்கின்மை என்ற காரணத்திற்காக இளநிலை உதவியாளர் ஹரி கோவிந்த் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

அதைப்போன்று திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவில் நிர்வாகப் பணிகளையும், கருவூலத்தையும் கவனித்து வந்தவர் மணியம் பழனிவேல் என்பவர் மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்துகள் வாங்கியதாக புகார்கள் எழுந்தது. இந்தச் சொத்துக் குவிப்பு வழக்கின் அடிப்படையில் ஊழல் தடுப்பு பிரிவின் கீழ் விசாரணை நடைபெற்று வருவதால் அதன் அடிப்படையில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் உத்தரவின் பேரில் அவர் தற்காலிகமாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

Related Stories: