டெல்லி: டெல்லி ஜந்தர் மந்தரில் மாணவர்கள் மீது போலீசாரின் தாக்குதல் தொடர்பான மனுவை அவசர வழக்காக வரும் திங்கள் (ஜூலை 27) அன்று விசாரிக்க உச்சநீதிமன்றம் சம்மதம் தெரிவித்துள்ளது. முன்னதாக கோரிக்கையை ஏற்க மறுத்த உச்சநீதிமன்றம், தற்போது முறையான மனுவை தாக்கல் செய்ததால் விசாரிப்பதாக தெரிவித்துள்ளது.
