*தொடர்பு கொள்ள அழைப்பு
பெரம்பலூர் : தேக்கு, சந்தனம், நெல்லி உள்ளிட்ட மரக்கன்றுகளை இலவசமாகப் பெற உரிய ஆவணங்களுடன் தொடர்பு கொள்ளலாம் என்று பெரம்பலூர் மாவட்ட வனஅலுவலர் சக்திவேல் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்திருப்பதாவது:
பெரம்பலூர் மாவட்டத்தின் பசுமைப் பரப்பினை அதிகரிப்பதற்காக, தமிழ்நாடு பல்லுயிர் பாதுகாப்பு மற்றும் காலநிலை மாற்றத்திற்கான பசுமைத் திட்டம் 2026-2027 மற்றும் பசுமைத் தமிழ்நாடு இயக்கம் (GMT) திட்டத்தின் கீழ், பெரம்பலூர் வனச்சரகர் சுதாகர் மேற்பார்வையில் இயங்கி வரும் பெரம்பலூர் வனச் சரகத்திற்கு உட்பட்ட இரட்டை மலை சந்து தலைமை நாற்றங்கால் மையம் மூலமும்,
வேப்பந்தட்டை வனச்சரகர் பழனிகுமரன் மேற்பார்வையில் பெரம்பலூர்- ஆத்தூர் சாலையிலிருந்து, அரசலூர் செல்லும் சாலையில் இயங்கி வரும், மத்திய உயர் தொழில்நுட்ப நாற்றங்கால் மையமான, செம்மலை நாற்றங்கால் மையம் மூலமாகவும், இதேபோல் சித்தளி, விளாமுத்தூர், நொச்சியம் பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள வனத் துறைக்குச் சொந்தமான நாற்றங்கால் மையங்களிலும் விவசாயிகளுக்குத் தேவையான தேக்கு, மகாகனி, புங்கன், வேம்பு, நீர் மருது, சந்தனம், நாவல், நெல்லி உள்ளிட்ட மரக் கன்றுகள் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.
பயனாளிகள் தங்களது விவசாய நிலங்கள், அரசு நிலங்கள், அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரி வளாகங்கள், தனியார் நிறுவனங்களில் மரக்கன்றுகள் நட்டுவைத்துப் பராமரிக்க விரும்பும் தண்ணீர் வசதி (கிணறு/போர்வெல்) உள்ள விவசாயிகள் அரசு மற்றும் தனியார் நிறுவனத்தினர் கீழ்க்காணும் செல்போன் எண்களில் தொடர்பு கொண்டோ அல்லது வனச்சரக அலுவலகங்களைத் நேரடியாகத் தொடர்பு கொண்டோ தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இதற்காக செம்மலை மத்திய உயர் தொழில் நுட்ப நாற்றங்கள் மையத்திற்கு அதன் பொறுப்பாளரான வனக்காப்பாளர் அன்பரசு என்பவரை 89258 54286 என்ற எண்ணிலும், மரக்கன்றுகளை அந்தந்தப் பகுதிகளில் பெற்றிட அன்னமங்கலம்- 99656 59632 என்ற எண்ணிலும், வெண்பாவூர்- 96004 15847 என்ற எண்ணிலும், கை.களத்தூர்- 96296 52182 என்றஎண்ணிலும், தொண்டமாந்துறை- 85310 17313 என்ற எண்ணிலும், பூலாம்பாடி- 97886 83838 என்ற எண்ணிலும், இரட்டைமலை சந்து தலைமை நாற்றங்கால் மையத்திற்கு பொறுப்பாளரான வனக்காப்பாளர் (புலியூர் பீட்) ஜீவிதா என்பவரை 63742 61911 என்ற எண்ணிலும், மற்றொருவரை 80569 08725 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.
இதன்படி மரக்கன்றுகள் தேவைப்படுவோர் சிட்டா, ஆதார் அட்டை, வங்கிக் கணக்குப் புத்தகம் ஆகியவற்றின் நகல்கள், புகைப் படங்கள்-2 ஆகியவற்றை, பெரம்பலூர் வனச்சரகத்திற்கு உட்பட்ட இரட்டைமலை சந்து பகுதியிலுள்ள, தலைமை நாற்றங்கால் மையத்திற்குக் கொண்டுவர வேண்டும்.
விவசாய நிலத்தினை களத் தணிக்கை செய்த பின்னரே மரக்கன்றுகள் வழங்கப்படும். ஆழ்துளைக் கிணறு மற்றும் பாதுகாப்பான கம்பிவேலி உள்ள விவசாயிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும் பெரம்பலூர் மாவட்ட வன அலுவலர் சக்திவேல் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.
