செயல் அலுவலர் பணியிடம் காலி கெலமங்கலம் பேரூராட்சியில் வளர்ச்சிப் பணிகள் பாதிப்பு

*பொதுமக்கள் அவதி

தேன்கனிக்கோட்டை : கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளனர். கெலமங்கலம் -ராயக்கோட்டை சாலையில், அதிக தொழிற்சாலைகள் உள்ளதால் பொதுமக்கள், வடமாநில தொழிலாளர்கள் பலர், ஞயிற்றுகிழமை வாரசந்தைக்கு பொருட்கள் வாங்க வருகின்றனர். கெலமங்கலம் வளர்ந்து வரும் பகுதியாக உள்ளது.

கடந்த 6 மாதங்களாக பர்கூர் செயல் அலுவலர் பொறுப்பு அலுவலராக பணி அமர்த்தப்பட்டுள்ளார். 60 கி.மீ தொலைவில் உள்ள செயல் அலுவலர், பொறுப்பு அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளதால், வாரத்திற்கு ஒரு நாள் மட்டுமே பணிக்கு வந்து செல்கிறார். இதனால் கெலமங்கலம் பகுதியில், வளர்ச்சி பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது.

பிறப்பு, இறப்பு சான்றிதழ் பெற, வீட்டுமனை கட்ட அனுமதி, குடிநீர் இணைப்பு உள்ளிட்ட பணிகளுக்கு, பொதுமக்கள் மாத கணக்கில் வந்து செல்லும் நிலை உள்ளது. பஸ் நிலையம் நுழைவு வாயில் பகுதியில், கழிவு நீர் தேங்கி கிடக்கிறது. மழை பெய்தால் கழிவு நீர் கலந்து கடும் துர்நாற்றம் வீசுகிறது. கணேஷ் காலனியில் உள்ள பனைதோப்பு பகுதியில், ஆழ்துணை கிணறு பேனல் போர்டு உடைந்து, ஆபத்தான நிலையில் உள்ளது. எனவே, காலியாக உள்ள செயல் அலுவலர் பணியிடத்தை உடனடியாக நிரப்ப மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: