ரூ.3 கோடி தந்தால் அமைச்சராக்குவதாக கூறி கேரள காங். பெண் எம்எல்ஏவிடம் மோசடிக்கு முயன்ற 2 பேர் கைது

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் எலத்தூர் தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏவாக இருப்பவர் வித்யா பாலகிருஷ்ணன். கடந்த சில தினங்களுக்கு முன் இவரது செல்போனில் அழைத்த ஒருவர், தன்னுடைய பெயர் ராஜ்குமார் என்றும், வயநாடு எம்பி பிரியங்கா காந்தியின் அலுவலகத்தில் இருந்து பேசுவதாகவும் ரூ. 3 கோடி தந்தால் உங்களை அமைச்சராக்குவதாகவும் வித்யா பாலகிருஷ்ணனிடம் அந்த நபர் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக வித்யா பாலகிருஷ்ணன் எம்எல்ஏ கோழிக்கோடு சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். விசாரணையில் மோசடி ஆசாமி டெல்லியைச் சேர்ந்தவர் என தெரியவந்தது. இதையடுத்து கோழிக்கோடு சைபர் கிரைம் போலீசார் டெல்லி சென்று நிதின்குமார், கவுரவ் ஆகிய 2 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் இருவரையும் போலீசார் கேரளாவுக்கு கொண்டு வந்து விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர்.

Related Stories: