திருமலை: நிறுவனத்தின் வாடகை காரிலேயே கடத்தி விமான நிலைய பெண் ஊழியரை டிரைவர் பலாத்காரம் செய்த சம்பவம் ஐதராபாத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள ஷம்ஷாபாத் விமான நிலையத்தில் பணிபுரியும் 25 வயதான தனியார் விமான நிறுவன பெண் ஊழியர், கடந்த 20ம் தேதி மதியம் பணிக்கு செல்ல நிறுவனம் ஏற்பாடு செய்த காரில் பயணித்துள்ளார்.
அப்போது கேப் டிரைவர் திடீரென வாகனத்தை திசை திருப்பி வேறு வழியில் ஓட்டிச்சென்று ஆட்கள் நடமாட்டம் இல்லாத பகுதியில் காரை நிறுத்தி இளம்பெண்ணை தாக்கி பலாத்காரம் செய்துள்ளார். பின்னர் அங்கிருந்து கேப் டிரைவர் தப்பிச் சென்ற நிலையில், அங்கு கட்டிட தொழிலில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் இளம்பெண்ணை மீட்டனர்.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட இளம்பெண் ஆர்.ஜி.ஐ.ஏ போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் வனபர்த்தி மாவட்டத்தை சேர்ந்த கார் டிரைவர் பிரசாந்த் குமார்(23) என்பவரை போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர்.
