தூத்துக்குடி: தூத்துக்குடியில் விசாரணைக்கு சென்ற அருணாச்சலம் மரணமடைந்த சம்பவம் தொடர்பாக நீதிபதி விஜயராஜ் விசாரணை நடத்தி வருகிறார். தென்பாகம் காவல் நிலையத்தில் இளைஞர் அருணாச்சலத்தை போலீஸ் அடித்துக் கொன்றதாக உறவினர்கள் புகார் அளித்துள்ளனர். உறவினர்களின் புகாரை அடுத்து இளைஞர் அருணாச்சலத்தின் காவல் மரணம் தொடர்பாக நீதிபதி நேரில் விசாரணை நடத்தி வருகிறார்.
