ஈரோடு: ஈரோட்டில் நீட் எதிர்ப்பு போராட்டத்தின்போது போலீசார் தாக்கியதாக மாணவர் சங்கத்தினர் புகார் அளித்துள்ளனர். மாணவர் சங்க நிர்வாகி நவீன்குமார் ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். போராட்டத்தின்போது போலீசார் குண்டுக்கட்டாக தூக்கிய போது மாணவர் சங்க நிர்வாகி காயம் என தகவல் தெரிவித்துள்ளனர். கைது செய்தபோது வேனில் ஏற மறுத்த தங்களை போலீஸ் தாக்கியதாக மாணவர் சங்கத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
