புதுடெல்லி: மகாதேவ் ஆன்லைன் பந்தய செயலி தொடர்பான ரூ.6 ஆயிரம் கோடி மதிப்பிலான பணமோசடி வழக்கில், எபிக்ஸ் குழுமத்தின் தலைவர் விகாஸ் கார்க்கை அமலாக்கத் துறை கைது செய்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். டெல்லியில் உள்ள அவரது வளாகங்களில் சோதனை நடத்தப்பட்டதைத் தொடர்ந்து, 53 வயதான கார்க் பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் காவலில் எடுக்கப்பட்டதாக அவர்கள் கூறினர்.
விசாரணை முடிந்து அவர் டெல்லியில் உள்ள ஒரு சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது மகாதேவ் பந்தய செயலி வழக்கு விசாரணை நடைபெற்று வரும் சட்டீஸ்கரின் ராய்ப்பூருக்கு அவரை அழைத்துச் செல்ல, அமலாக்கத்துறைக்கு 24 மணிநேர காவலை நீதிமன்றம் வழங்கியது.
