2 தனியார் பஸ்களுக்கு எச்சரிக்கை நோட்டீஸ்

 

பள்ளிபாளையம், ஜூலை 9: பள்ளிபாளையத்தில் நகருக்குள் வராமல், மேம்பாலத்தில் சென்ற 2 தனியார் பஸ்களை, வட்டார போக்குவரத்து அதிகாரிகள் மடக்கி பிடித்து, எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கினர்.
பள்ளிபாளையம் வழியாக இயக்கப்படும் தனியார் பஸ்கள், நகருக்குள் வந்து பயணிகளை ஏற்றி இறக்காமல், மேம்பாலத்தில் பயணித்து காவிரி ஆற்றுப்பாலத்தில் பயணிகளை இறக்குவதாகவும், அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதலாக கட்டணம் வசூலிப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக பயணிகளுக்கும், நடத்துனருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு, காவல் நிலையத்தில் சமரச பேச்சுவார்த்தை நடைபெற்றது. இது தொடர்பாக நாமக்கல் கலெக்டர் மதுபாலன் பஸ் நிர்வாகத்திற்கு கடும் எச்சரிக்கை விடுத்தார்.

Related Stories: