ஆன்லைன் கலந்தாய்வில் முதுகலை ஆசிரியர் காலிப்பணியிடங்கள் மறைப்பு

 

நாமக்கல், ஜூலை 9: நாமக்கல்லில் நடைபெற்ற ஆன்லைன் கலந்தாய்வில், முதுகலை ஆசிரியர் காலிப்பணியிடங்கள் மறைக்கப்பட்டதால், ஆசிரியர்கள் கலந்தாய்வை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து காலி பணியிடங்ஙகள் மீண்டும் காட்டப்பட்டு கலந்தாய்வு நடைபெற்றது.
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரிய, ஆசிரியைகளுக்கான இடமாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு, கடந்த 1ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வு, மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு போன்றவை நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. நேற்று அரசு மேல்நிலைப்பள்ளியில் பணியாற்றும் முதுகலை ஆசிரியர்களுக்கு, மாவட்டத்திற்குள் இடமாறுதல் அளிப்பதற்கான ஆன்லைன் கலந்தாய்வு நடைபெற்றது. பாடவாரியாக தனித்தனி அறைகளில் இந்த கலந்தாய்வு நடைபெற்றது. மாவட்டத்தில் உள்ள பல்வேறு அரசு பள்ளிகளில் பணியாற்றும் 403 முதுகலை ஆசிரியர்கள் இதில் கலந்து கொண்டனர்.

 

Related Stories: