குறைதீர் கூட்டத்தில் 619 மனுக்கள் குவிந்தன

 

நாமக்கல், ஜூன் 30: நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் 619 மனுக்கள் குவிந்தன. நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில். மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் சரவணன் தலைமை வகித்தார். குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்று குறைகளைக் கேட்டறிந்தார். கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, இலவச வீட்டுமனை பட்டா, வங்கி கடனுதவி, குடிசை மாற்று வாரிய வீடு, குடிநீர் வசதி, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வேண்டி பல்வேறு கோரிக்கைகள் குறித்து மொத்தம் 619 மனுக்கள் பெறப்பட்டது. இந்த மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

தொடர்ந்து, மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் ஒருவருக்கு ரூ.3,289 மதிப்பில் காதொலி கருவியினை மாவட்ட வருவாய் அலுவலர் சரவணன் வழங்கினார். கூட்டத்தில், வருவாய் கோட்டாட்சியர்கள் சாந்தி(நாமக்கல்), லெனின்(திருச்செங்கோடு), கலெக்டரின் நேர்முக உதவியாளர் சுரேஷ்குமார், தனித்துணை கலெக்டர்(சமூக பாதுகாப்புத் திட்டம்) கற்பகம், உதவி ஆணையர்(கலால்) ராஜேஷ்குமார் மாவட்ட பிற்படுத்தப்பட்ட நல அலுவலர் கிருஷ்ணவேணி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் கலைச்செல்வி உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

 

Related Stories: