திண்டுக்கல் அருகே விசிக பிரமுகர் என கூறி சுங்கச் சாவடியில் தகராறு

திண்டுக்கல்: நத்தம் அருகே விசிக பிரமுகர் என கூறி கட்டணம் செலுத்தாமல் சுங்கச் சாவடியில் தகராறு ஏற்பட்டுள்ளது. விசிக பிரமுகர் என்பதால் தனது காரை கட்டணமின்றி செல்ல அனுமதிக்குமாறு கூறி சுங்கச்சாவடி ஊழியர் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். கள்ளந்திரியைச் சேர்ந்த பூவன், அவரது நண்பர் ஆகியோரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விசிக பிரமுகர் தாக்கியதில் படுகாயமடைந்த சுங்கச் சாவடி ஊழியர் ஆண்டிசாமி மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Related Stories: