தண்டவாளத்தில் ஏற்பட்டுள்ள விரிசலால் சென்னை கடற்கரை – தாம்பரம் இடையே ரயில் சேவை பாதிப்பு!

சென்னை: சென்னை கடற்கரை – தாம்பரம் இடையே ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் ரயில் மேடை 1-ல் தண்டவாளம் சேதமடைந்துள்ளது. சென்னை கடற்கரை – தாம்பரம் நோக்கி செல்லும் ரயில்கள் பயணிக்கும் பிரதான வழித்தடமாக இது உள்ளது.

சமீபத்தில் தண்டவாள பராமரிப்பு பணிகள் காரணமாக 41 புறநகர ரயில்கள் ரத்து செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில், நெரிசல் மிகுந்த நேரத்தில் தற்போது ரயில் தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டுள்ள காரணத்தால், அந்தப் பகுதியில் மட்டும் ரயில்கள் மெதுவாக செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சென்னை கடற்கரை நிலையத்திலிருந்து தாம்பரம் வரை இயக்கப்படும் ரயில்ககளில் இதனால் தாமதம் ஏற்பட்டது. இதனையடுத்து பல புறநகர் ரயில்கள் தாமதமாக இயக்கப்படுவதால் பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். தண்டவாளத்தில் சேதம் ஏற்பட்டதற்கான காரணம் என்ன என்பது குறித்து ரயில்வே அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். தண்டவாளம் சேதமடைந்துள்ள நிலையில் அதனை சரிசெய்யும் பணியில் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இதனால், காலையில் பணிக்குச் செல்லும் மக்கள் கடும் அவதி அடைந்துள்ளனர்.

Related Stories: