அணு கனிம சுரங்க திட்டத்திற்கான நில ஒதுக்கீட்டு ஆணையை திரும்பபெற வேண்டும்: தமாகா வேண்டுகோள்

சென்னை: தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்ட அறிக்கை :
கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு தாலுகாவில் அணுக்கனிமங்கள் எடுப்பதற்காக ஒன்றிய அரசின் ஐஆர்இஎல் நிறுவனத்திற்கு ஒதுக்கப்பட்ட 1,144 ஹெக்டேர் நில ஒதுக்கீட்டை தமிழ்நாடு அரசு ஓராண்டுக்கு நீட்டித்துள்ளது. இந்த நடவடிக்கை அப்பகுதி மக்களிடையே கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இத்திட்டம் சுற்றுச்சூழல் மற்றும் மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் என்பதால் இதற்கு எதிராக உள்ளூர் மக்களும், கடலோர பகுதி மக்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக அணுக்கனிம சுரங்கம் அமையவுள்ள பகுதியைச் சேர்ந்த மக்களுக்கு கதிர்வீச்சு பாதிப்பு, புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு அபாயங்கள் ஏற்படலாம் என்றும், மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படலாம் என்றும் இத்திட்டத்தை எதிர்ப்பவர்கள் குற்றம் சாட்டுகிறார்கள். அவர்களின் வாழ்வாதாரம், உடல்நலன், கடலோர சூழல் பாதிக்கும். எனவே, இத்திட்டத்திற்கான நீட்டிப்பை தமிழக அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories: