குதிரை பேரமா? அப்படின்னா? கேட்கிறார் செங்கோட்டையன்

கோபி: குதிரை பேரம் என்றால் என்ன என்பது குறித்து சிலபஸில் தேடுகிறோம் என்று அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார். ஈரோடு மாவட்டம் கோபி அருகே நல்லகவுண்டன்பாளையத்தில் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் இன்று அளித்த பேட்டி:

குதிரை பேரம் என்பது குறித்து எனக்கு புரியவில்லை. எல்லோரும் குதிரை பேரம் என சொல்கிறார்கள். பலரும் புரியாத ஒன்றை குதிரை பேரம் என சொல்கின்றனர். அதற்கு வேறு பொருள் தமிழ்நாட்டில் தேடிக் கொண்டிருக்கின்றோம். எப்படி அதற்கு பதில் சொல்வது என சிலபஸில் தேடிக் கொண்டிருக்கின்றோம். கிடைத்தால் அதற்கு பதில் சொல்கிறோம். குதிரை பேரம் பேச வேண்டிய அவசியம் இந்த ஆட்சிக்கு இல்லை. ஆளுநர் அதிகார வரம்பை மீறி செயல்படுவது குறித்து சட்ட அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: