சென்னை: பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளாகி கைது செய்யப்பட்டு சிறை சென்ற தவெக நிர்வாகியை, அரசு விழாவிற்கு அழைப்பதா என்று கனிமொழி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்பி தனது எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:
பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளாகி கைது செய்யப்பட்டு சிறை சென்ற தவெக நிர்வாகியை, அரசு விழாவிற்கு அழைத்து அழகுபார்ப்பது ஒருபுறம். பாலியல் வன்கொடுமை புகாரை திருப்பி பெறும்படி திருவைகுண்டத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணை மிரட்டும் தவெக எம்.எல்.ஏ மறுபுறம். இது தான் தவெக உறுதியளித்த பெண்கள் பாதுகாப்பா? இவ்வாறு பதிவில் கூறப்பட்டுள்ளது.
