புதுச்சேரி நீதிமன்றத்தில் நிதியமைச்சர் மரிய வில்சன் ஆஜராகவில்லை: நீதிபதி காட்டம்

புதுச்சேரி: தவெக சார்பில் ஆர்.கே. நகர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற மரிய வில்சன், தற்போது தமிழக நிதியமைச்சராக பதவி வகித்து வருகிறார். இவர், கடந்த 2022ம் ஆண்டு ஆகஸ்ட் 8ம் தேதி தொழில் போட்டி காரணமாக, புதுச்சேரி எழில் நகரில் வசித்து வந்த தனது உடன்பிறந்த தம்பி மரி கிளோத் மற்றும் அவரது மனைவி கேரலின் ஆகியோரின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து, உருட்டுக்கட்டையால் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தார்.
இச்சம்பவத்தில் காயமடைந்த மரி கிளோத், அவரது மனைவி கேரலின் ஆகியோர் லாஸ்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில், வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து தாக்குதல், ஆபத்தான ஆயுதத்தால் காயம் ஏற்படுத்துதல், பெண்ணின் மானத்தை அவமதித்தல், கொலை மிரட்டல் மற்றும் கூட்டுச் சதி உள்பட 8 பிரிவுகளின் கீழ் மரிய வில்சன் மீது லாஸ்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இவ்வழக்கு விசாரணை புதுச்சேரி முதலாவது குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. வழக்கு விசாரணைக்காக பலமுறை வாய்தா வழங்கப்பட்ட போதிலும், அமைச்சர் மரிய வில்சன் தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், இதனை நேரில் பெற்றுக் கொள்வதற்காக இன்று புதுச்சேரி நீதிமன்றத்தில் கட்டாயம் ஆஜராக வேண்டுமென நீதிபதி சேரலாதன் உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில் தமிழக நிதியமைச்சர் மரிய வில்சன் இன்று புதுச்சேரி நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. தமிழக பட்ஜெட் தயாரிப்பு பணிகள் இருப்பதால் அவரால் ஆஜராக முடியவில்லை என அவரது தரப்பு வழக்கறிஞர்கள் நீதிபதியிடம் முறையிட்டனர்.

அப்போது நீதிபதி, ஏற்கனவே, தமிழக சட்டப் பேரவை அலுவல்களை காரணமாககூறி 15 நாட்கள் கால அவகாசம் கேட்டீர்கள். ஆனால் 3 தினங்கள் மட்டுமே சட்டப்ேபரவை நடந்தது. இதன் காரணமாகவே, உங்களது மனுதாரர் அமைச்சர் என்பதால் விடுமுறை தினமான (சனி) இன்று ஆஜராகுமாறு உத்தரவிட்டிருந்தேன். தற்போது மேலும் 15 நாள் அவகாசம் கேட்கிறீர்கள். இதற்கு கால அவகாசம் வழங்கினால் மீண்டும் அடுத்தகட்டமாக சட்டபேரவை கூடும் தேதியை காரணமாக குறிப்பிட்டு ேமலும் இவ்வழக்கில் விலக்கு கேட்பீர்கள். எனவே குற்றப்பத்திரிகை பெறுவதற்காக மரிய வில்சன் வருகிற 10ம்தேதி நேரில் ஆஜராக வேண்டுமென நீதிபதி காட்டமாக கூறினார்.

Related Stories: