சேலம் தவெக நிர்வாகி தோழிகளுடன் குத்தாட்டம்: சமூக வலைதளங்களில் வீடியோ வைரல்

சேலம்: சேலம் அயோத்தியாப்பட்டணம் தவெக நிர்வாகி, பீர் பாட்டிலுடன் ஆடும் தோழிகளுடன் குத்தாட்டம் போடும் வீடியோ சமூகவலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் குத்தாட்டம் போடும் வீடியோக்கள் சமூகவலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. சமீபத்தில் தவெக அமைச்சர் ஒருவர், போதை பவுடரை நசுக்கும் வீடியோ பரவியது. இவ்வாறு வீடியோக்கள் பரவி வரும் நிலையில் சேலம் மாவட்டம் அயோத்தியாப்பட்டணம் தெற்கு ஒன்றிய தவெக செயலாளர் வேதநாயகத்தின் குத்தாட்ட வீடியோவும் தற்போது வேகமாக பரவி வருகிறது. அவரது தோழி ஒருவர் செல்போன் ஸ்டேட்டசில் வைத்துள்ள அந்த குத்தாட்ட போதை காட்சிகளை பதிவு செய்து அக்கட்சியினரே பரப்பி வருகின்றனர். அந்த வீடியோவில், மின்விளக்குகள் மின்னி மின்னி அணையும் காட்சியுடன், பெண்கள் அசைந்து அசைந்து ஆடும் நிலையில், பெண் ஒருவர் கையில் பீரை குடித்துக்கொண்டே ஆட்டம் போடுகிறார். அதன் அருகில் வேதநாயகம், இடுப்பை அசைத்து அசைத்து ஆடும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது.

அந்த வீடியோவின் மேல்பகுதியில், `தமிழக வெற்றி கழகத்தின் அயோத்தியாப்பட்டணம் தெற்கு ஒன்றிய செயலாளர் மதுபோதையில் நட்சத்திர விடுதியில் மகளிர் அணி தோழிகளுடன் குத்தாட்டம்’ என்ற விளக்கமும் இடம்பெற்றுள்ளது. இந்த வீடியோ காட்சி, அக்கட்சியினரிடையே பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இதுகுறித்து வேதநாயகத்திடம் கேட்டபோது, ‘‘கோவையில் நடந்த புத்தாண்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன். குத்தாட்டம் ஏதும் நான் போடவில்லை. விஜய் மக்கள் இயக்கத்தில் இருந்து நீக்கப்பட்ட சந்திரன், பாபு, கார்த்தி ஆகியோர் தான் இதற்கு காரணம். இவர்கள் மீது காவல்துறையில் புகார் செய்ய இருக்கிறேன்’’ என்றார்.

Related Stories: