சென்னை: உணவுத்துறை அதிகாரிகள் தெரிவித்ததாவது:
சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் விஜய் தலைமையில் உணவுத்துறை தொடர்பான உயர்மட்ட ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட தாயுமானவர் திட்டத்தில் 65 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் வீட்டுக்கு ரேஷன் பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு வந்தது. இத்திட்டத்துக்கான வயது வரம்பை 60 வரை குறைக்கலாம் என முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விரிவாக்கத்தின் மூலம் லட்சக்கணக்கான புதிய பயனாளிகள் பயன்பெறுவார்கள் என்றும், இதற்கான நிர்வாக மற்றும் தொழில்நுட்ப ஏற்பாடுகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு முதல்வர் அறிவுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
