வாழ்க்கை ஒரு வட்டம் என்ற பழமொழி மீண்டும் நிரூபணம்; அமைச்சர் பர்வேஸிடம் சரண் அடைந்த விஜயபாஸ்கர்

சென்னை: வாழ்க்கை ஒரு வட்டம் என்ற பழமொழி மீண்டும் நிரூபணமாகிவிட்டது என்று அமைச்சர் பர்வேஸிடம், முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் சரணடைந்தது குறித்து தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. அதிமுகவில் இருந்து பதவிக்காகவும், சில, பல தேவைகளுக்காகவும் எம்எல்ஏக்கள், முன்னாள் எம்எல்ஏக்கள் தவெகவுக்கு தாவி வருகின்றனர்.

அந்த வகையில் முன்னாள் அமைச்சர் புதுக்கோட்டை விஜயபாஸ்கர், கரூர் விஜயபாஸ்கர் ஆகியோர் நேற்று முன்தினம் தவெகவில் புஸ்ஸி ஆனந்த் முன்னிலையில் கட்சியில் இணைந்தனர். கட்சியில் இணைவதற்கு முதல்நாள் புதுக்கோட்டையைச் சேர்ந்த அமைச்சர் பர்வேஸை, விஜயபாஸ்கர் சந்தித்துப் பேசினார். இந்தப் புகைப்படங்கள் வெளியானது. இதைப் பார்த்ததும் அதிமுகவினர், வாழ்க்கை ஒரு வட்டம் என்று விளக்கும் சிறப்பான புகைப்படம்தான் இது என்று சமூக வலைதளங்களில் எழுதி வருகின்றனர்.

அதில் அவர்கள் தொடர்ந்து எழுதும்போது, ‘‘இந்த படத்தில் விஜயபாஸ்கரோடு இருக்கும் இப்போதைய அமைச்சர் முகமது பர்வேஸ் முன்னாள் அதிமுக புதுக்கோட்டை நகர செயலாளர் ஜாபர் அலியின் மகன். ஜாபர் அலி அப்போதைய அதிமுக வீட்டு வசதித்துறை அமைச்சர் எஸ் ரகுபதியின் தளபதி. அதிமுகவில் அவர் இருந்த காலத்தில், தன்னம்பிக்கையற்ற கட்சி பொறுப்பாளர்களை ஜெயா சுழற்றி அடிப்பது வழக்கம். இதில் ஜாபர் அலியும் சிக்கினார். இதை பயன்படுத்தி ஜாபர் அலிக்கு பல பர்லாங்கு கீழே இருந்த விஜயபாஸ்கர் மேலே வந்தார்.

ஜெயலலிதாவின்வின் பலவீனத்தை பயன்படுத்தி அதிமுகவின் உச்சத்திற்கு சென்றார் விஜயபாஸ்கர். இவர்களிடம் அரசியல் செய்ய முடியாமல் ஜாபர் அலி திமுகவுக்கு சென்றார். பின்னாளில் புதுகை நகர கூட்டுறவு தேர்தலில் ஜாபர் அலியை மனு செய்ய விடாமல் தடுத்து, தனது தந்தை வெல்ல பிசிஆர் வழக்குப்போட வைத்து ஜாபரை சிறையிலடைக்க வைத்தார் விஜயபாஸ்கர். அந்த நினைவு மகனுக்கு இன்றளவும் இருப்பதாக கூறப்படுகிறது. ஜெயலலிதா காலத்தில் எந்த ஜாபருக்கு கீழே தன் அரசியல் வாழ்வை துவங்கினாரோ அதே ஜாபரின் மகனுக்கு கீழே மீண்டும் அடுத்த இன்னிங்ஸை துவங்குகிறார் விஜயபாஸ்கர். அதனாலதான் வேறு யாரையும் விட விஜயபாஸ்கருக்கு வாழ்க்கை மிக நேர்த்தியான வட்டம் என்ற பழமொழி பொருந்துகிறது என்று கூறுகின்றனர் அதிமுகவினர்’’ என வலைத்தளங்களில் தெரிவிக்கப்படுகிறது.

திரிஷாவுக்கு அம்மா முத்தம்
அதிமுகவில் சாதாரண தொண்டராக இருந்த விஜயபாஸ்கர், அண்ணாசாலையில், ஜெயலலிதாவுக்கு அவரது அம்மா சந்தியா முத்தம் கொடுப்பதுபோன்ற புகைப்படத்தை பேனராக கட்டியிருந்தார். இதைப் பார்த்த ஜெயலலிதா, யார் இதை வைத்தது என்று விசாரித்தார். அப்போது விஜயபாஸ்கர் என்று தெரிந்ததும், அவரை அழைத்து பாராட்டியதோடு அவரக்கு மாணவரணி செயலாளர் பின்னர் தேர்தலில் புதுக்கோட்டை தொகுதியில் சீட், அமைச்சர் என்று வரிசையாக பதவிகளை வழங்கினார். தற்போது அதை நினைவுகூர்ந்துள்ள அதிமுகவினர், ‘‘திரிஷாவுக்கு அவரது அம்மா முத்தம் தரும் படத்தை மயிலாப்பூரில் பேனராக வைத்தாவது ஆட்சியாளருக்கு அடுத்த நிலைக்கு சென்று விடுவார் குட்கா மன்னன் விஜயபாஸ்கர் என்றும் நெட்டிசன்கள் எழுதியுள்ளனர்.

Related Stories: