சீர்காழி: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகா அலுவலகத்திற்கு தினமும் பொதுமக்கள் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மனு கொடுக்க வந்து செல்கின்றனர். இந்த நிலையில் நேற்று வழக்கம் போல் பொதுமக்கள் சான்றிதழ்கள் வாங்கவும், வண்டல் மண் எடுப்பதற்கு அனுமதி பெறுவதற்கும் அலுவலகம் வந்தனர். அப்போது தாலுகா அலுவலகம் முன்பு குப்பையில் குவியல் குவியலாக புதிய வாக்காளர் வண்ண அட்டைகள் கிடந்தது. இதனை பார்த்து பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். சீர்காழி தாலுகாவுக்கு உட்பட்ட கிராமங்களை சேர்ந்த இளம் வாக்காளர்களின் அடையாள அட்டை அதிக அளவில் காணப்பட்டது.
