மாவட்ட ஆட்சியர்கள் இ-சேவை மையங்களை ஆய்வு செய்ய உத்தரவு

சென்னை: தமிழகம் முழுவதும் செயல்பட்டு வரும் இ-சேவை மையங்கள் மற்றும் பொது சேவை மையங்களின் செயல்பாடுகளை மாவட்ட ஆட்சியர்கள் நேரடியாக ஆய்வு செய்ய தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. பொதுமக்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் பிற சேவைகள் காலதாமதமின்றி வழங்கப்படுவதை உறுதி செய்யும் நோக்கில், அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் தங்கள் மாவட்டங்களில் செயல்பட்டு வரும் இ-சேவை மையங்கள் மற்றும் பொது சேவை மையங்களை நேரில் ஆய்வு செய்ய வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

ஆய்வின்போது, விண்ணப்பங்கள் உரிய காலக்கெடுவுக்குள் பரிசீலிக்கப்படுகிறதா, சான்றிதழ்கள் தாமதமின்றி வழங்கப்படுகிறதா, பொதுமக்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறதா, கணினி மற்றும் இணைய வசதிகள் முறையாக செயல்படுகிறதா, பணியாளர்களின் சேவை தரம் திருப்திகரமாக உள்ளதா என்பது உள்ளிட்ட அம்சங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், ஆய்வில் கண்டறியப்படும் குறைபாடுகளை உடனடியாக சரிசெய்து, பொதுமக்கள் சிரமமின்றி அரசு சேவைகளைப் பெற தேவையான நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகங்கள் மேற்கொள்ள வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

Related Stories: