சீனாவிடம் திட்டமிட்ட சரணடைதல் கொள்கையை பின்பற்றும் மோடி அரசு: காங்கிரஸ் கடும் தாக்கு

புதுடெல்லி: “மோடி தலைமையிலான அரசு சீனாவிடம் திட்டமிட்ட அரசியல் கொள்கையை பின்பற்றி வருகிறது” என காங்கிரஸ் குற்றம்சாட்டி உள்ளது.

இதுகுறித்து காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஜெய்ராம் ரமேஷ் தன் எக்ஸ் பதிவில், இந்தியாவில் நான்கு சீன மின்சாதன தயாரிப்பு நிறுவனங்களை, முக்கியமான மின் திட்டங்களுக்கான அரசு ஒப்பந்தப்புள்ளிகளில் பங்கேற்க இந்தியா அனுமதி அளித்துள்ளதாக கூறப்படும் ஊடக செய்தி ஒன்றை பகிர்ந்துள்ளார்.

அத்துடன், “சீனாவுடனான இந்தியாவின் வர்த்தக பற்றாக்குறை சாதனை அளவை எட்டி, நமது தொழில்துறையின் பெரும் பகுதியையும், குறிப்பாக, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்களையும் அழித்து வரும் நிலையிலும் மோடி அரசாங்கம் சீனாவிடம் காட்டும் திட்டமிட்ட சரணடைதல் போக்கு தொடர்கிறது. அருணாச்சலபிரதேசம் தொடர்பான சீனாவின் ஆத்திரமூட்டும் நடவடிக்கைகள் குறையாமல் தொடர்கிறது. பிரம்மபுத்திரா நதி தொடர்பான இந்தியாவின் நீர் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளது. கிழக்கு லடாக்கின் பல பகுதிகளில் இந்தியாவுக்கு இருந்த பாரம்பரிய ரோந்து மற்றும் கால்நடை மேய்ச்சல் உரிமைகள் கைவிடப்பட்டுள்ளன ” என ஜெய்ராம் ரமேஷ் குற்றம்சாட்டி உள்ளார்.

Related Stories: