கேரளத்தில் ஆபரேஷன் தூஃபான் அதிரடி வேட்டை; 1 மாதத்தில் ரூ.30 கோடிக்கு மேல் போதைப்பொருட்கள் பறிமுதல்

திருவனந்தபுரம்: கேரளத்தில் உள்துறை அமைச்சராக பொறுப்பேற்ற ரமேஷ் சென்னித்தலா, போதைப்பொருளை கட்டுப்படுத்த ஆபரேஷன் தூஃபான் என்ற திட்டத்தை கடந்த மாதம் அறிவித்தார். இதன்படி மாநிலம் முழுவதும் போலீசார் மற்றும் கலால் துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்த சோதனையில் தினமும் எம்டிஎம்ஏ, உயர்ரக கலப்பின கஞ்சா, பிரவுன் சுகர், உள்பட போதைப்பொருட்கள் பெருமளவு கைப்பற்றப்பட்டு வருகின்றன. கடந்த 1 மாதத்தில் மட்டும் ரூ. 30 கோடிக்கு மேல் மதிப்புள்ள போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. 3.7 கிலோ எம்டிஎம்ஏ, 392 கிலோ கஞ்சா, 657 கிராம் பிரவுன் சுகர், 12 கிராம் மெத்தாபிட்டமின், 31 கிராம் ஹெராயின், 428 கஞ்சா செடிகள் உள்பட போதைப்பொருட்களை போலீசார் கைப்பற்றியுள்ளனர். கடந்த சில தினங்களுக்கு முன் எர்ணாகுளத்தில் ரூ. 18 கோடி மதிப்புள்ள உயர்ரக கலப்பின கஞ்சா கைப்பற்றப்பட்டது.

இது தொடர்பாக இதுவரை 5353 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 5736 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மாநிலம் முழுவதும் போதைப்பொருள் வேட்டை தொடர்ந்து நடைபெறும் என்று கேரள உள்துறை அமைச்சர் ரமேஷ் சென்னித்தலா கூறினார்.

Related Stories: