இன்ஸ்டாவில் குழந்தைகளின் ஆபாசம்; மெட்டாவுக்கு சம்மன்: ஒன்றிய அரசு அதிரடி

புதுடெல்லி: குழந்தை பாலியல் துஷ்பிரயோக உள்ளடக்கம், இன்ஸ்டாகிராம் விளம்பரங்களில் இடம் பெறுவது தொடர்பாக ஒன்றிய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. மெட்டாவின் பரிந்துரை அல்காரிதம் குழந்தை பாலியல் துஷ்பிரயோக உள்ளடக்கத்தைக் கொண்ட வீடியோக்களை ஊக்குவிப்பதாகவும், அதன் பாதுகாப்பு நடவடிக்கைகளில் தீவிர குறைபாடுகள் இருப்பதாகவும் பிபிசி நடத்திய விசாரணை ஒன்றில் குற்றம் சாட்டப்பட்டது. இதுதொடர்பாக ஒன்றிய அரசின் நடவடிக்கை மற்றும் பிபிசி அறிக்கை குறித்து கருத்து கோரி மெட்டா நிறுவனத்திற்கு அனுப்பப்பட்ட மின்னஞ்சலுக்கு எந்தப் பதிலும் கிடைக்கவில்லை.

இதையடுத்து மெட்டா நிறுவனத்திடம் விளக்கம் கோர நடவடிக்கை எடுக்க ஒன்றிய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. மெட்டா நிறுவனத்தின் பிரதிநிதிகளை நேரில் அழைத்து விளக்கம் கேட்க தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் உத்தரவிட்டுள்ளார். இந்த வாரத்தில் மெட்டா நிறுவனத்தின் மீது அரசு கடுமையான நடவடிக்கையை மேற்கொள்ளும் இரண்டாவது நிகழ்வு இதுவாகும்.

Related Stories: