நாளை மறுநாள் முதல் 11ம் தேதி வரை இந்தோனேஷியா, ஆஸ்திரேலியா நியூசிலாந்துக்கு பிரதமர் மோடி பயணம்

புதுடெல்லி: பிரதமர் மோடி நாளை மறுநாள் முதல் வருகிற 11ம் தேதி வரை இந்தோனேசியா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்துக்கு அரசு முறை பயணம் மேற்கொள்கிறார்.

டெல்லியில் வெளியுறவு அமைச்சகத்தின் செயலாளர் ருத்ரேந்திர டாண்டன் செய்தியாளர்களிடம் பேசுகையில்,”
பிரதமர் மோடி ஜூலை 6ம் தேதி முதல் 11ம் தேதி வரை மூன்று நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். முதல் கட்டமாக இந்தோனேசியா செல்லும் பிரதமர் அதனை தொடர்ந்து ஆஸ்திரேலியாவுக்கு செல்கிறார். மெல்போர்ன் நகரில் முக்கிய நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். இறுதியாக நியூசிலாந்தில் தனது பயணத்தை நிறைவு செய்வார். சுமார் 40 ஆண்டுகளில் ஒரு இந்திய பிரதமர் மேற்கொள்ளும் முதல் பயணம் என்பதால் பிரதமர் மோடியின் நியூசிலாந்து பயணம் சிறப்பானதாக அமையும்” என்றார்.

பொருட்கள் மற்றும் சேவைகள் சார்ந்த இருதரப்பு வர்த்தகத்தை அதிகரிக்கவும், முதலீடுகளை ஊக்குவிக்கவும் இந்தியாவும் நியூசிலாந்தும் இந்த ஆண்டின் தொடக்கத்தில் சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. இந்த ஒப்பந்தம் நியூசிலாந்துக்கு செய்யப்படும் இந்தியாவின் ஏற்றுமதிகளில் 100சதவீத்துக்கு வரிஇல்லாத அணுகலை வழங்குகின்றது. இந்தியாவை பொறுத்தவரை இந்த ஒப்பந்தம் அதிக வருமானம் கொண்ட விதிமுறைகளை அடிப்படையாக கொண்ட பசிபிக் சந்தைக்கான அணுகலை வலுப்படுத்துவதுடன் அதன் பரந்த இந்தோ-பசிபிக் பொருளாதார உத்திக்கும் ஆதரவளிக்கிறது. இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு சரக்கு வர்த்தகம் 2024-2025ம் ஆண்டு 1.3பில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது. 2024ம் ஆண்டு பொருட்கள் மற்றும் சேவைகள் சார்ந்த மொத்த வர்ததகம் சுமார் 2.4பில்லியன் டாலரை எட்டியது.

Related Stories: