மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஈரோடு, திருப்பூர் மாவட்ட மதிமுகவினர் திமுகவில் இணைந்தனர்

சென்னை: ஈரோடு, திருப்பூர் மாவட்ட மதிமுகவினர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் நேற்று திமுகவில் இணைந்தனர். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் நேற்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள திமுக அலுவலகத்தில், மதிமுகவைச் சேர்ந்த ஈரோடு தெற்கு மாவட்ட முன்னாள் செயலாளர் மு.கோபால், தலைமையில் மதிமுகவைச் சேர்ந்த தலைமைச் செயற்குழு முன்னாள் உறுப்பினர் பி.வி.செல்வராஜ், ஈரோடு நாடாளுமன்ற தொகுதி இணையதள அமைப்பாளர் கபிலன் கணேசமூர்த்தி, மாவட்ட முன்னாள் துணைச் செயலாளர் எஸ்.நல்லசிவம், மொடக்குறிச்சி ஒன்றியத்தைச் சேர்ந்த முன்னாள் செயலாளர் வி.பி.ஈஸ்வரமூர்த்தி,

முன்னாள் அவைத்தலைவர் எஸ்.லோகநாதன், முன்னாள் பொருளாளர் டி.சிவசுப்பிரமணி, கொடுமுடி ஒன்றிய முன்னாள் செயலாளர் பி.துரைசாமி, கொடுமுடி பேரூர் முன்னாள் செயலாளர் டி.பாலசுப்பிரமணியம், மாவட்ட தொண்டர் அணி முன்னாள் அமைப்பாளர் வி.பி.பழனிவேல்ராஜ், மாவட்ட இளைஞர் அணி முன்னாள் அமைப்பாளர்கள் கே.ஜெயபிரகாஷ், த.வினோத்குமார், ஈரோடு மாநகர் மாவட்ட பொருளாளர் குணசேகரன், ஈரோடு மாநகர் மாவட்ட துணைச் செயலாளர் கதிர்வேல், கழக வெளியீட்டு அணி மாநில துணைச் செயலாளர் நாகராஜ், ஈரோடு மாநகர் வீரமணி தி.மு.க.வில் இணைந்தனர்.

அப்போது, திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு, துணைப் பொதுச்செயலாளர் மு.பெ.சாமிநாதன், அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, செய்தி தொடர்பு தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன், ஈரோடு தெற்கு மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர் சு.முத்துசாமி உடனிருந்தனர்.

இதே போல திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், மதிமுகவைச் சேர்ந்த திருப்பூர் கிழக்கு மாவட்டம், காங்கயம் நகரச் செயலாளர் ஏ.வெங்கடேஷ்வரன் மற்றும் பொதுக்குழு உறுப்பினர் ப.ராசேந்திரன் திமுகவில் இணைந்தனர். அப்போது பொருளாளர் டி.ஆர்.பாலு, துணைப் பொதுச்செயலாளர் மு.பெ.சாமிநாதன், திருப்பூர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் இல.பத்மநாபன் உடனிருந்தனர்.

Related Stories: